11/11/2013

கவிதைகள்

உதடுகளின் முகம்

எனக்கு ஒரு
நண்பன் உண்டு.

பருத்த வயிறு,
படியவாரிய தலை,
துணிந்த நடை,
தேடல் கண்கள்.

நாணயங்கள்
சிதறிய ஒலியாய்,
கலகலத்த மனம்,
கைகுலுக்கும் நேயம்.

விழி வலிக்காத
கோபம்.
வளையும் குணம்.

வார்த்தை வரிசை
மாறாத நேர்ப்பேச்சு.
வளமான நெற்றியில்
வசதியாய் அமர்ந்த
முடிக்கீற்று.

எல்லாம் என்னுள்
விமர்சிக்கப்படுவதுண்டு.

 ஆனால்
வெள்ளை இதழ்களின்
பின்புலத்தில் விரியும்
வெடிச்சிரிப்பு மட்டும்
என்னால்
அழகியலாக்கப்படும்.

நகையுணர்வு பரப்பும்
உதடுகளின் முகம்
உயிர்க்கும் அழகன்றோ ?


11/10/2013

புதிய மாவட்டத் தலைவர்



                             புதிய மாவட்டத் தலைவர்

புதிய மாவட்டச் செயலர்


புதிய மாவட்டச் செயலர்.

புதிய பொறுப்பாளர்கள்

1.
மாவட்டத் தலைவர்
  கு..திருப்பதி.
2.
மாவட்டச் செயலாளர்
  சி.குருநாதசுந்தரம்
3.
மாவட்டப் பொருளாளர்
  சந்தன ஆரோக்கியநாதன்
4.
மாவட்ட இணைச்செயலர்
  இளங்கோவடிவேல்
5.
தேர்வுத் திட்டச் செயலாளர்கள்
1.  துரைக்குமரன் 
( புதுக்கோட்டை)
2.  இளங்கோவன்
( அறந்தாங்கி )
6.
மாவட்டத் துணைத் தலைவர்கள்
1.  சாந்தி
2.  முத்துலெட்சுமி.
7.
மாவட்டத் துணைச் செயலாளர்கள்
1.  இராணி
2.  மணி
8.
மாவட்டத் தணிக்கையாளர்கள்
1.  இராசேந்திரன்
2.  செயராமன்
9.
மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள்
1.  முத்துபாஸ்கரன்
2.  மகாசுந்தர்
3.  கருணாநிதி
4.  கணபதி
5.  சார்லஸ்சகாயராசு
6.  முருகேசன்


வணக்கம். தமிழ் நெஞ்சங்களே !


தமிழகத் தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.
                             
                                            புதுக்கோட்டை மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர் 
கழகத்தின் மாவட்டத் தேர்தல் 28.08.2013 அன்று புதுக்கோட்டை இராணியார் 
அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இராமையா 
தலைமையேற்றார். மாநிலத் தலைவர் ஆறுமுகம் தேர்தல் ஆணையராகச் 
செயல்பட்டு புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை மாவட்டச் செயலர் காந்திநாதன் அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திப் பேசினார். மாவட்டப் பொருளர் இராசேந்திரன், மேனாள் பொறுப்பாளர்கள் சந்தானமூர்த்தி, பாலசுப்பிரமணியன்,முத்துபாஸ்கரன்,
இராதாகிருட்டிணன், துரை சந்திரகாந்தி, சௌந்திரராசன்,உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி, பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் செல்வேந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்