தமிழகத்
தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை
மாவட்டம்.
புதுக்கோட்டை
மாவட்டப் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு.
புதுக்கோட்டை
மாவட்டத் தமிழகத் தமிழாசிரியர்
கழகத்தின் மாவட்டத் தேர்தல்
28.08.2013 அன்று புதுக்கோட்டை இராணியார்
அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் இராமையா
தலைமையேற்றார். மாநிலத்
தலைவர் ஆறுமுகம் தேர்தல் ஆணையராகச்
செயல்பட்டு புதிய பொறுப்பாளர்களை அறிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்களை மாவட்டச் செயலர் காந்திநாதன்
அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திப் பேசினார். மாவட்டப் பொருளர்
இராசேந்திரன், மேனாள் பொறுப்பாளர்கள் சந்தானமூர்த்தி,
பாலசுப்பிரமணியன்,முத்துபாஸ்கரன்,
இராதாகிருட்டிணன்,
துரை சந்திரகாந்தி, சௌந்திரராசன்,உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலர் சாமிசத்தியமூர்த்தி,
பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் செல்வேந்திரன் ஆகியோர் வாழ்த்திப்
பேசினர்.
|
|
|
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக